Sports
சென்னை vs மும்பை - தடுமாறி வரும் சூப்பர் கிங்ஸ்!
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் 9 வெற்றி, 5 தோல்வியைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான தகுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வியுறும் அணிக்கு வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி. இந்த ஆட்டத்தில் கேதார் ஜாதவுக்கு பதிலாக முரளி விஜய் ஆடுகிறார். தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், டுபிளெஸ்சிஸ் களமிறங்கினர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!