Sports
ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்லுவேன் - தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை !
சென்னை விமான நிலையத்தில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த நான் ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வேண்டுள்ளேன்.
தமிழகத்தில் வேலை செய்து தங்கம் வெல்ல வேண்டும் என்று தான் என் விருப்பம் என்று கூறினார். மேலும் என்னை போன்று வரும் ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் எனவும், திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி பேருந்து வசதி கூட இல்லாத கிராமத்தில் இருந்து தான் நான் வந்துள்ளேன். இதுபோன்ற பேருந்து, உணவு, மைதானம் என விளையாட்டு பயிற்சி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.அதேபோல் தமிழ்நாடு அரசு உதவி செய்தால், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
Also Read
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!