Sports
“என்னை அறியாமல் வெற்றியைக் கொண்டாடினேன்” - தங்க மங்கை கோமதி நெகிழ்ச்சி
கத்தார் நாட்டின் தோஹாவில் 23வது ஆசிய தடகள போட்டி ஏப்ரல் 22ல் நடைபெற்றது. இதில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இந்தியா வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடத்தில் கடந்து நாட்டுக்கு முதல் தங்கப்பதங்கத்தை வென்று தந்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் இருந்து வந்த கோமதி மாரிமுத்துவின் வெற்றியை அரசியல் தலைவர்களும், பொதுமக்களும், பொது வெளி மற்றும் சமூக வலைதளம் என அனைத்திலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து கோமதி கூறியதாவது,
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள முடிகண்டம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து ஆசிய போட்டியில் போட்டியிட்டு, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று தந்துள்ளேன்.
தங்கப்பதக்கம் வெல்வதையே என்னுடைய வாழ்நாள் கனவாக கொண்டிருந்தேன். என்றாவது ஒருநாள் நிறைவேறிவிடாத என்ற ஏக்கம் என்னுள் பல இருந்திருக்கிறது.
முடிவு எல்லையை தாண்டும் போது என்னை அறியாமலேயே சந்தோஷத்தில் கையை உயர்த்தி வெற்றிக்களிப்பில் திளைத்திருக்கிறேன்.
ஆசிய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் என்னுடை கிராமத்தின் பெயர் வெளியே தெரிகிறது. இது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இறுதி வரையில் வெற்றி இலக்கை அடைவேன் என்பதை எதிர்ப்பார்க்கவில்லை. தங்க மங்கை கோமதி மாரிமுத்து.
மேலும் பேசிய அவர், தன்னுடைய வெற்றிக்கும் ஊக்கத்திற்கும் எனது தந்தை மாரிமுத்துவே காரணம் என குறிப்பிட்டுள்ளார். கல்லூரி காலத்தில் இறுதியில்தான் ஓட்டப்பந்தையம் எனக்கு அறிமுகம் ஆனது. எனது சகோதரர் என்னை விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என தடுத்தார். ஆனால் எனது தந்தையே என்னை ஊக்கப்படுத்தினார் என உருக்கமாக கூறினார்.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!