உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பிழந்த ரிஷப் பண்ட் 
Sports

உலகக் கோப்பை இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறாதது ஏன்? - தேர்வாளர்கள் சொன்ன காரணம்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்தது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பண்ட் தேர்வு செய்யப்படாதது பற்றி பிரசாத் கூறுகையில் “ ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே சமமான திறன் கொண்டவர்கள். தோனி விளையாட முடியாத சூழ்நிலையில் இவர்களில் ஒருவர் அணியில் விளையாட வேண்டி வரும். தோனியின் இடத்தில் விளையாடுபவர் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அந்த வகையில் தினேஷ் கார்த்திக் நல்ல அனுபவம் கொண்டவராக இருப்பதால், பண்ட்டுக்கு பதில் அவரை நாங்கள் தேர்வு செய்தோம்” என்றார்.

இதே போல், அம்பதி ராயுடுவுக்கு பதிலாக 4-ம் இடத்தில் களம் இறங்க, விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கரின் பந்து வீச்சு திறன் அவரை அணியில் தேர்வு செய்ய கூடுதல் காரணியாக இருந்ததாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.