Sports
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட வரும் மலிங்கா.
இலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பவுலராக உள்ளார்.இலங்கை அணி டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. எனவே தகுதிச் சுற்றில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டிய நிலையில் உள்ளது.இதற்காக இலங்கை அணி முக்கிய வீரர்களை,அணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆகவே, உடனடியாக அவர் மும்பை அணியில் இணைய உள்ளார்.
அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மலிங்கா இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.மும்பை இந்தியன்ஸ் தனது முதல் போட்டியில்,டெல்லி அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!