Politics
சோனியா, ராகுல், 3 முதலமைச்சர்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் சென்னை வருகை! : தி.மு.க தலைவருடன் சந்திப்பு!
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, 3 முதலமைச்சர்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் என நாட்டின் அரசியல் தலைமைகள் ஒன்றாகக்கூடி, சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க வருகின்றனர்.
திரைக் கவர்ச்சியால் ஆட்சியைப் பிடித்தவர்கள், ‘தொகுதி மறுவரையறை’ குறித்து வாய் திறக்காமல், இருக்கும் இடமே தெரியாமல் பதுங்கி இருக்கும் வேளையில், இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் தி.மு.க மீதும், தி.மு.க தலைவர் மீதும் விழுந்துள்ளது.
மாநில நலனே முதன்மையானது என்ற நோக்கில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்கும் முடிவுக்கு தி.மு.க வந்துள்ளது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இதனால், தங்களின் செல்வாக்கு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பதற்றத்தில், கூட்டணியில் இருந்து விலகும்போது சொல்லாமல் சென்ற கட்சியினரின் முதன்மைத் தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை நோக்கி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நோக்கி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் தி.மு.க கூட்டணியில் இருந்தபோது, இணைந்து பிரச்சாரம் செய்யக்கூட வராத எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் சகோதரர் பாசத்துடன் தி.மு.க தலைவரைக் காண வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மற்றும் தமிழக மக்களின் நலன்களை முன்னிறுத்தி எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறோம்.
இந்த பாதையில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பனாக அல்ல கட்டபொம்மனாகவே தீர்மானிக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘எட்டப்பன்கள்’ அல்ல, ‘கட்டபொம்மன்கள்’.. கொள்கையில் சமரசம் இல்லை : ராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பதில்!
-
“Delimitation-ன் பேராபத்தை திமுக தடுத்துள்ளது.. எல்லைச்சாமியாக மு.க.ஸ்டாலின்” : தங்கம் தென்னரசு பேட்டி!
-
மக்களே உஷார்... கோவையில் அடுத்தடுத்து உயிரிழந்த நாரைகள்... ஆய்வில் அதிர்ச்சி!
-
தொலைநோக்குப் பார்வையில் மு.க.ஸ்டாலின் : தொகுதி மறுவரையறையில் சரியான நேரத்தில் சரியான முடிவு!
-
தொகுதி மறுவரையறை மசோதா - தி.மு.க. ஆதரிக்கக் காரணம் என்ன? - ஆ.ராசா எம்.பி. விளக்கம்!