Politics
செஞ்சியில் காணாமல்போன சிறுமியின் பெற்றோருக்கு கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்.. தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த வடிவேல் - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா மாயமான நிலையில், சிறுமியின் இல்லத்திற்குச் சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்!
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, “செஞ்சியில் சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் 34 நாட்களுக்கு மேலாகிறது. காவல்துறை, குழந்தைகள் நலன் இரண்டும் முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் இருக்கக்கூடிய துறைகள். அதில் நடக்கும் தவறுகளுக்கு யார் பொறுப்பு? இதே குழந்தைகளை வைத்து அடம்பிடித்து ஓட்டுவாங்கிதான் முதலமைச்சர் பதவியில் விஜய் உள்ளார். ஒருபுறம் குழந்தைகளுக்கு கேக் ஊட்டும் முதலமைச்சர், செஞ்சி சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூட வரவில்லையே ஏன்?”
கொளத்தூரில், தனது ரசிகரையே பார்த்து பாதுகாப்பில்லை என பயந்துவிட்டார் விஜய். அந்தளவில் தான் தவெக ஆட்சி உள்ளது. அவரது நேரடித் துறைகளில் தவறு நடக்கும்போது கூட வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு வரலாற்றில் பார்த்தது இல்லை.
குழந்தைகளுக்கு, பெண்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருவோம் என ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதற்கு நேர்மாறாக நடந்து வருகிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்பில்லாத ஒரு முதலமைச்சர் உள்ளார். ஒரு தரங்கெட்ட ஆட்சியாக தவெக ஆட்சி நடந்து வருகிறது. ஆளுங்கட்சியாலேயே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலைதான் உள்ளது.
எதிர்க்கட்சியாக திமுக போராட்டம் நடத்தவோ, வலியுறுத்தவோ தான் முடியும். ஆனால், ஆளுங்கட்சிதான் மனசாட்சியோடு செயல்பட வேண்டும். தங்களுடைய பாதுகாப்புக்காக மட்டும் இல்லாமல், காணாமல் போன பெண்கள், குழந்தைகளை கண்டுபிடிக்க காவல்துறையை பயன்படுத்த வேண்டும், எனத் தெரிவித்தார்.
Also Read
-
16 வழக்குகள் நிலுவை... பெண் யூடியூபருக்கு கொலை மிரட்டல்: யூடியூபர் மணிகண்டன் கைது! (முழுப் பின்னணி)
-
சொந்தக் கட்சிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி மீது புகார்: அலட்சியம் காட்டிய தவெக எம்.எல்.ஏ!
-
பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தவெகவைச் சேர்ந்தவரின் கொடூரச் செயல்: வாக்குமூலத்தில் பகீர் தகவல்!
-
“மேகதாது அணை விவகாரம்; அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்” : CM விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
‘தமிழ்நாடு’ என்ற பெயர்.. தி.மு.க ஆற்றிய பங்கு.. வரலாற்றை திரிப்பதா? : முரசொலி தலையங்கம் சீற்றம்!