Politics

திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் வளரட்டும்! : மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து!

தேசிய குழந்தைகள் தினம் இன்று (நவ.14) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் குழந்தைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்!

அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்!

அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில்,

🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய்

🤝 அன்புக்கரங்கள்

🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

🏡 இல்லம் தேடிக் கல்வி

🔢 எண்ணும் எழுத்தும்

🔬 வானவில் மன்றம்

💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம்

எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்!

குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்!

திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்!

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

மகிழ்ச்சியின் வடிவமாக வலம் வரும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தூய அன்பையும் - தன்னிகரில்லா கனவுகளையும் சுமந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்றைக்கும் துணை நிற்போம்.

ஒவ்வொரு குழந்தையும் அறிவின் துணையோடு வாழ்வில் வென்று சமூகத்தை உயர்த்த என் அன்பும் - வாழ்த்தும்! என தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர், கனிமொழி எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

கனவுகளுடன் இந்த உலகை எதிர்நோக்கும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாத்து, அவர்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வளர்வதற்கான சூழலை உருவாக்குவோம்.

குழந்தைகள் தின வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

Also Read: “மேகதாது அணை விவகாரம்; அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்” : CM விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!