Politics
திரிஷா விஜய், சங்கீதா விஜய் பெயர்களில் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? : தி.மு.க முன்வைத்த 8 கேள்விகள்!
கோவை ‘பெரியார் அறிவுலகத்திற்கான’ புத்தக கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
திரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
Also Read
-
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதலில் ஊழல்.. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார் மனு!
-
‘இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள்..!’ : திமுக கடும் விமர்சனம்!
-
கரூர் என்றால் ரூ 20 லட்சம் ; காசிமேடு மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா? த.வெ.க அரசே, இது என்ன நியாயம்..?
-
“மீனவர்களுக்கு தி.மு.க என்றும் துணை நிற்கும்!” - காசிமேடு பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி!
-
“இந்தியாவுக்கே பேரிழப்பு : குரியன் ஜோசப் குழு கலைப்பு” - த.வெ.க.வுக்கு சு.வெங்கடேசன் MP கண்டனம்!