Politics
கரூர் என்றால் ரூ 20 லட்சம் ; காசிமேடு மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா? த.வெ.க அரசே, இது என்ன நியாயம்..?
சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வங்கக்கடலில் ‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஆபத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தும், அவர்களை பாதுகாப்பாக மீட்பதில் த.வெ.க அரசு மெத்தனமாக இருந்ததால், அக்குடும்பத்தினர் இப்போது பேரிழப்பை எதிர்கொண்டுள்ளனர்..
ஒன்பது மீனவர்களில் ஐந்து பேரின் உடல்கள் ஆந்திரக் கடற்கரையில் மீட்க்கப்பட்டுள்ளன. எஞ்சிய நான்கு பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், காசிமேடு மீனவர்கள் மத்தியில் பதற்றம் நீடிக்கிறது.
இந்த துயரச்சம்பத்தில் மீனவர்கள் காணாமல் போனது, அவர்கள் குடும்பத்தினர் அளித்த தகவல்கள், மீட்புப் பணிகள் ஆகியவை குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று காசிமேடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மீனவக் குடும்பங்களின் கண்ணீருக்கும் கதறலுக்கும் அரசு உரிய பதிலளிக்க வேண்டும். எச்சரிக்கை விடுப்பதில் ஏற்பட்ட குறைபாடுகள் என்ன? மீட்புப் பணிகள் எப்போது தொடங்கப்பட்டன? அதிகாரிகல் ஒருங்கிணைப்பில் ஏற்பட்டட் சிக்கல் என்ன? மீனமக்களின் நியாயமான இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் த.வெ.க அரசு மவுனம் சாதிப்பது ஏன்?
கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட்டது.. அதன்பின்னர், அரசு வேலையையும் த.வெ.க அரசு கொடுத்தது.
ஆனால், வங்கக் கடலில் முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க அரசு அறிவித்திருப்பது வெறும் ரூ. 7 லட்சம் மட்டுமே. அதில், 2 லட்சம் ரூபாய் மட்டுமே உடனடியாக கொடுக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
’’த.வெ.க அரசு அறிவித்துள்ள நிதி போதாது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும்’’ என்ற கோரிக்கையை காசிமேடு மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பின்னணியைப் பார்த்துதான் த.வெ.க அரசு இழப்பீட்டை நிர்ணயிக்குமா? கடலில் உயிரை பணயம் வைத்து உழைக்கும் மீனவர்கள், இந்த மண்ணின் குடிமக்கள் இல்லையா? அவர்களுக்கு எதிர்காலமில்லையா? என்று காசிமேடு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு நியாயம்; கடலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மற்றொரு நியாயமா? மீனவர் என்றால் இளக்காரமா?
Also Read
-
“மீனவர்களுக்கு தி.மு.க என்றும் துணை நிற்கும்!” - காசிமேடு பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி!
-
“இந்தியாவுக்கே பேரிழப்பு : குரியன் ஜோசப் குழு கலைப்பு” - த.வெ.க.வுக்கு சு.வெங்கடேசன் MP கண்டனம்!
-
“மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்த முதலமைச்சர் விஜய் ; வரலாறு மறக்காது, மன்னிக்காது” : தி.மு.க!
-
“அதிபர் டிரம்பின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல்” : முரசொலி தலையங்கம்!
-
கோவை அறிவுலகம் புத்தகம் விவகாரம்.. அரசியலுக்கு பயன்படுத்தும் தவெக.. சட்ட நடவடிக்கை தேவை! : கோவி.செழியன்!