Politics
‘இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள்..!’ : திமுக கடும் விமர்சனம்!
தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதே வாடிக்கையாக உள்ள நிலையில், இதுகுறித்து எந்த நடவடிக்கையையும் தவெக அரசு எடுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் மர்ம கஞ்சாவை மறைத்து வைத்துவிட்டு, சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் கடை உரிமையாளரை கைது செய்ய முயன்றதாக கூறப்படும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், கடந்த காலங்களில் கஞ்சா விற்பவர்களை தேடி பிடித்து வந்த காவல்துறை , Dummy CM Sir ஆட்சியில் கஞ்சா வைப்புத் துறையாக மாறி உள்ளது.
1000 கோடி மெத் போதை பொருளை கடத்திய போதை கடத்தல் மன்னன் TVK பூபாலனை கைது செய்யாத CM சாரின் ஏவல் துறை, சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளது. குற்றவாளிகளை எல்லாம் Free ஆ தப்பிக்கவிட்டு பொது மக்களை பிடித்து சிறையில் அடைக்க துடிக்கிறது துப்புகெட்ட தவெக அரசு.
ஒருபக்கம் தவெக நிர்வாகி மெத் போதை பொருள் கடத்துகிறார். மறுபக்கம் போலீசாரே கஞ்சா வைக்கிறார்கள்.
இதற்கிடையில் டம்மி CM விஜய் போதை ஒரு ஜாலி என மாணவர்களிடம் பேசுகிறார். இதுதான் தூய சக்தியின் போதை ஒழிப்பு இலட்சணம்.
இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள்.
டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியதால், காவல்துறையாலேயே கஞ்சா வைக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான சிங்கம்புணரி வணிகருடன் கழகம் உறுதியோடு துணை நிற்கிறது. தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்ற வழக்கு பதிவு செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பான டம்மி முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட வணிகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என தெரிவித்துள்ளது.
Also Read
-
கரூர் என்றால் ரூ 20 லட்சம் ; காசிமேடு மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா? த.வெ.க அரசே, இது என்ன நியாயம்..?
-
“மீனவர்களுக்கு தி.மு.க என்றும் துணை நிற்கும்!” - காசிமேடு பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி!
-
“இந்தியாவுக்கே பேரிழப்பு : குரியன் ஜோசப் குழு கலைப்பு” - த.வெ.க.வுக்கு சு.வெங்கடேசன் MP கண்டனம்!
-
“மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்த முதலமைச்சர் விஜய் ; வரலாறு மறக்காது, மன்னிக்காது” : தி.மு.க!
-
“அதிபர் டிரம்பின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல்” : முரசொலி தலையங்கம்!