Politics

“SIR-ஐ எதிர்த்தது யார்? ஒளிந்தது யார்?...” அம்பலமாகும் தவெக நாடகம்.. - வெளுத்து வாங்கிய ரகுபதி!

ஞானேஷ் குமாருக்கு வக்காலத்து, எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பா? என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க தி.மு.க.வினர் பாடுபட்டதை பாராட்டும் விதமாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் எங்கள் தலைவர் பேசியதை ஒட்டி, வெட்டி போட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர் திமுகவிடம் பதிலடியாக வாங்கி கட்டிக் கொண்டார்.

அந்த ’கால் அமுக்கி’ மாணிக்கம் தாகூருக்கு விழுந்த வசவுகளுக்கு ஒத்தடம் கொடுக்க ஓடி வந்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. SIR விவகாரத்தில் திமுக எதையும் செய்யவில்லை? பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டது என்றெல்லாம் கதைகளை கட்டவிழ்த்திருக்கிறார்.

முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தானே ஆதவ் அர்ஜுனாவுக்கு இதெல்லாம் தெரியும்! அப்படி தெரியவில்லை என்றால் எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்று உங்கள் கூட்டணியில் சேர்ந்திருக்கும் கல்லா பெட்டி கூட்டணியினரான காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சியினரை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைக்கு (Special Intensive Revision - SIR) எதிராக திமுக மேற்கொண்ட தொடர் முயற்சிகள், சட்டப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் சாட்சிகளாக இருந்தவர்கள் இன்றைக்கு தவெக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் தலைவர்கள்தான். SIR-ஐ திமுக எதிர்க்கவில்லை என்றால், அவர்களும் எதிர்க்கவில்லை என்றுதானே அர்த்தம்! இப்போது கள்ள மவுனம் காப்பவர்கள் யார்? என்பது நாடறியும்.

* 2025 அக்டோபரில் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இவ்வளவு பெரிய பணியைச் செய்வது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பீகார் மாநிலத்தைப் போல லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்று குற்றம் சாட்டி கூட்டறிக்கை வெளியிட்டது.

* SIR-க்கு 2025 நவம்பர் 2 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 46 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.

* அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் SIR நடைமுறைக்கு எதிராக ஒருமனதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுக்கப்பட்டது.

* பீகாரில் சிறுபான்மையினர் மற்றும் பாஜக அல்லாத 65 லட்சம் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டது போல, தமிழகத்திலும் செய்யத் திட்டமிடும் தேர்தல் ஆணையத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

* SIR பணியை உடனடியாகத் திரும்பப் பெற்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு போதிய கால அவகாசம் வழங்கி வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பருவமழைக் காலப் பாதிப்பால் மக்கள் படிவங்களை சமர்ப்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதால் அந்த காலகட்டத்தில் பணியைச் செய்யக் கூடாது என திமுக அறிவுறுத்தியது.

* 2025 நவம்பரில் SIR-க்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

* SIR நடைமுறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 2025 நவம்பர் 11 அன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

* 2025 டிசம்பரில் SIR நடைமுறைக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து திமுக, விடுபட்ட மற்றும் முறையற்ற முறையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்த தங்களின் பூத் ஏஜென்ட்டுகளுக்கு அறிவுறுத்தியது.

* நாடாளுமன்றத்தில் SIR நடைமுறைக்கு எதிராகத் தங்களின் கடுமையான எதிர்ப்புக் குரலை திமுக எம்.பி-கள் பதிவு செய்தனர். பீகாரில் SIR-ஆல் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை நாடாளுமன்ற விவாதங்களில் திமுக எம்பிக்கள் ஆதாரமாக முன்வைத்துக் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

* SIR-ஐ கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இணைந்து தொடர் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.

- இப்படி SIR விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வெட்டவெளிச்சமாக இருந்த போது திமுக எதையும் செய்யவில்லை என கதை கட்டுகிறார்கள். SIR விவகாரத்தில் தவெக என்ன செய்தது?

Also Read: மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொலை வழக்கு : கைதிகளை வைத்து தாக்க சொன்ன போலீஸ்... அடுத்தடுத்து அதிர்ச்சி !