Politics
தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு! - த.வெ.க அரசின் அலட்சியத்தால் தொடரும் அவதி!
தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மின்வெட்டு சிக்கல் பெருகிக்கொண்டே வருகிறது.
இரவு நேரங்களில் மின்வெட்டு, பகல் நேரங்களில் மின்வெட்டு, மணிநேரங்களாக தொடரும் மின்வெட்டு, மின்வெட்டால் தொடரும் நீர் தட்டுப்பாடு என மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்து வருகிறது.
இதனால், ஒவ்வொரு நாளும் சாலைகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர். எனினும், த.வெ.க ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆகியும் மின் மின்வெட்டு சிக்கல் தீர்ந்ததாகயில்லை.
மின்துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிர்மல் குமாரின் அலட்சியமே மின்வெட்டிற்கு காரணம் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
காரணம், தொடர்ச்சியான கட்சி நிகழ்ச்சிகள், அவதூறு பரப்பல்கள், த.வெ.க அரசின் பிற துறைகளுக்கான நிகழ்ச்சிகள் என சுற்றிச்சுழலும் அமைச்சர் நிர்மல் குமார், மின்துறையை கவனிக்கும் நேரம் விரல்விட்டு எண்ணும் அளவிற்குதான் இருக்கிறது.
இந்த அலட்சியப்போக்கால், இன்று (அக்.12) சென்னை தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு ஏற்பட்டு, மின்வெட்டு நாயகர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார் நிர்மல் குமார்.
மின்வெட்டு சிக்கலுக்கு தீர்வு காணாத அமைச்சர் நிர்மல் குமாரின் பொறுப்பற்றப் போக்கை கண்டிக்க வேண்டிய முதலமைச்சர் விஜய் அவர்களோ, ஒரு நாள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று ரீல்ஸ் எடுத்துக்கொண்டு திரும்பினாரே தவிர, அவரும் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
ஆனால், மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில், டிஜிட்டல் மீட்டர் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, மக்களுக்கான சேவைத்துறையை தனியாருக்கு பறிகொடுக்க இருக்கிறார்கள் என்பது மட்டும் அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது.
இதுவரை ‘முன்னணி மாநிலம் தமிழ்நாடு’, ‘தலைநிமிர்ந்த தமிழ்நாடு’ எனப் பெயர் பெற்று வந்த மாநிலம், த.வெ.க ஆட்சியில் ‘மின்வெட்டுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாடு’ என பெயர் பெற்றிருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“டெல்லி ஓனர்களின் பாணியில் அடக்குமுறையை ஏவும் த.வெ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“பாத்ரூம் கூட போகவிடல”.. போராட்டத்துக்கு கிளம்பிய மருத்துவ பணியாளர்கள்.. வீட்டு காவலில் அடைத்த தவெக அரசு!
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச்சாயம் - பிரதமர் மோடியை வரவேற்று, வழி அனுப்பிய விஜய் கண்டனம் தெரிவித்தாரா?
-
கேரியரின் உச்சத்தில் இருந்தவரை முருங்கைக்காய் பறிக்க வைத்தது திமுக-வின் வெற்றிதானே? : முரசொலி தலையங்கம்!
-
கோவையில் பரபரப்பு.. காவல்நிலையத்திற்கு தவெக கட்சிக் கொடி கட்டி வந்த கார்.. காவலர்கள் மீதும் தாக்குதல்!