Politics
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நபர் வர்ஷினி வெங்கட்.
இவர் குறும்படம் எடுப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்து, தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தவெக பிரமுகராக வர்சினி தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நிலையிலும், அவரைக் குறித்து பதிவிடும் செய்திகளில் தவெக பெயர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதனைக் கண்டித்து, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட கண்டனப் பதிவு பின்வருமாறு,
“குறும்படம் எடுப்பதாகக் கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததோடு, பணத்தைக் கேட்ட இளைஞரைத் தாக்கிச் செல்போனைப் பறித்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தவெகவைச் சார்ந்த வர்ஷினி வெங்கட்.
ஆனால், செய்திக்குத் தேவையான புகைப்படத்தை எடுப்பதற்காகக் கைது செய்யப்பட்ட வர்ஷினி வெங்கட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குச் சென்ற ஊடகங்கள், அவர் அப்பட்டமாக ஒரு தவெக காரர் என்பதை அவரது சமூக வலைதளப் பக்கங்களே ஊரறியச் சொல்லும்போது, செய்திகளில் 'தவெக' என்ற ஒற்றை வார்த்தையைக்கூடப் பயன்படுத்த நீங்கள் தயங்குவது ஏன்?
இதே குற்றம் சாட்டப்பட்ட நபர், ஒரு திமுக காரரின் பக்கத்து வீட்டுக்காரராகவோ அல்லது என்றோ ஒருநாள் திமுக பிரமுகருடன் புகைப்படம் எடுத்தவராகவோ இருந்திருந்தால் இந்த ஊடகங்கள் அமைதியாக இருந்திருக்குமா?
திமுகவுக்குத் தொடர்பா என்று பிரேக்கிங் நியூஸ் போட்டு அலறியிருக்க மாட்டீர்களா? இப்போது கைதாகியிருக்கும் நபர் 'தவெக' என்று சொல்லாமல் விடுவதற்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன?
திமுக என்றால் இல்லாததை எல்லாம் இணைத்துச் செய்தி வெளியிடும் ஊடகங்கள், தவெகவினரின் மோசடிகளையும் அத்துமீறல்களையும் மட்டும் மூடி மறைப்பது எந்த வகையான ஊடக அறம்?”
Also Read
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!
-
“Airport-ஐ தனியாருக்கு கொடுத்துடுங்க..”- TN Budget அன்றே மோடிக்கு கடிதம்.. கிழிந்த விஜயின் முகத்திரை!
-
பச்சிளம் குழந்தைகளின் மருந்துக்கு தட்டுப்பாடு; என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? : கனிமொழி MP!