Politics
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
“மனித மாண்புகளுக்கு எதிரானதாக முதல்வரின் உடல்மொழி இருக்கிறது” என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
“காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.”
Also Read
-
ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டு கொள்ளை அடிக்கும் தவெக அரசு.. இதுவா Dummy CM சொன்ன மாற்றம்?: உதயநிதி கேள்வி!
-
புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்க.. - ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் MP அவசர கடிதம்!
-
இவருக்கு பதில் இவர்... மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் விஜய்... தீபக் நாதன் கடும் கண்டனம்!
-
த.வெ.க வழங்குவது ஆட்சியா.. க்ரைம் த்ரில்லர் படமா? : கீதா ஜீவன் கடும் சாடல்!
-
“நிதி இல்லை என்று கைவிரிப்பது நிர்வாகத்தின் பதிலாகிவிடாது” ; அமைச்சர் ரமேஷ்-க்கு சேகர்பாபு பதிலடி!