Politics
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் மரணங்கள் அதிகரிப்பதையும், குற்றவாளிகள் தப்பித்துச் செல்லும் நிர்வாகத் தோல்வி நடவடிக்கைகள் அதிகரிப்பதையும் சுட்டிக்காட்டி, தி.மு.க இளைஞர் அணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,
நாகர்கோவில் கிளைச்சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் மரணமடைந்திருக்கிறார்.
நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
உடல் முழுவதும் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரிய வந்திருக்கிறது. மாற்றுத்திறனாளி என்றும் பாராமல், அவருக்கு பாதிப்பு இருக்கக்கூடிய வலது கையை கண்மூடித்தனமாக தாக்கி உடைத்திருக்கிறார்கள் என்று உறவினர்கள் கூறுகின்றனர். தலை முதல் கால் வரை அவருடைய உடலில் காயங்களும், ரத்தக்கட்டுக்களும் இருந்திருக்கின்றன.
அந்த கொடூரம் அடங்குவதற்குள், சென்னை மத்திய சிறையில் பாலாஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த இவர், கைது செய்யப்பட்டபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். ஆனால் திடீரென அவருடைய இறப்பு நிகழ்ந்திருக்கிறது.
இன்னொரு பக்கம் சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 12 பேர் பூட்டை உடைத்துக்கொண்டு தப்பியோடி உள்ளனர். வழியில் கண்ணில் பட்ட பொதுமக்களை எல்லாம் தாக்கி, செல்போன், இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
ஒரே வாரத்தில் சிறைத்துறையில் இத்தனை அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. சம்பந்தம் இல்லாத துறைகள் குறித்தெல்லாம் சம்பந்தம் இல்லாத கருத்துகளையும், அரசியல் நாகரிகம் இல்லாமல் வரைமுறையற்ற பேச்சுக்களை பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள, சிறைத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நிர்மல் குமார், இந்த பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னும் வாயையே திறக்கவில்லை.
மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய முடியாமல் திணறுவதைப் போலவே, சிறைத்துறை சீரழிவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். குற்றவாளிகளை சீர்படுத்த வேண்டிய சிறைத்துறையை எப்படி சீர்படுத்துவது குறித்து சிந்தியுங்கள் அமைச்சரே!
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!