Politics
திட்டமிட்டு அவதூறு பரப்பும் விஜய்? ஆதாரங்களுடன் அம்பலம்.. தேர்தலை எதிர்கொள்ளத் திணருகிறதா விஜய் கட்சி!
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்குதல் என கடுமையான நெருக்கடியில் வேலை செய்து வருகின்றன.
ஆனால், வழக்கம்போல ஒரு கட்சி மட்டும் அரசை குறைகூறி வருகிறது. என்ன இது தேர்தல் அறிவித்ததிலிருந்து தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறை உள்ளிட்ட பல துறைகள் இயங்கிவரும் நிலையில், விஜய் அவர்களின் பிரச்சாரத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அனுதாபம் தேடும் முயற்சிகளின் உண்மை முகம், தேர்தல் நடத்தும் அலுவலரின் அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
விஜய் கட்சி தரப்பில் அனுமதி கோரப்பட்ட 'முல்லை நகர் சந்திப்பு' (எஸ் எம் நகர் 82 ஆவது பிளாக்) என்பது, மிகச் சிறிய அளவிலான தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவதற்கு மட்டுமே உகந்த ஒரு குறுகிய பகுதியாகும். ஆனால், அந்தச் சிறிய இடத்தில் சுமார் 3,000 பேரைத் திரட்டி கூட்டம் நடத்தப் போவதாக விஜய் கட்சியினர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு குறுகிய இடத்தில் 3000 பேர் கூடினால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரு கோரிக்கையாகும்.
மேலும், பிரச்சாரத்திற்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்படவில்லை என்பதே காவல் துறை மற்றும் தேர்தல் அலுவலரின் அறிக்கையில் உள்ள முக்கியத் தகவலாக பார்க்கப்படுகிறது. "வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து மனு அளிக்கும் பட்சத்தில், பிரச்சாரத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்று மிகத் தெளிவாக அந்தக் கடிதத்தில் மாற்று வழியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை ரீதியான அறிவுறுத்தலையும், பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடி குறித்த உண்மைகளையும் திட்டமிட்டு மறைத்துவிட்டு, தங்களை அரசியலில் இருந்தே ஏதோ ஒடுக்க நினைப்பதாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது விஜய் கட்சியினக்குருக்கும் விஜய்க்கும் இருக்கும் முதிர்ச்சியற்ற அரசியலையே காட்டுகிறது.
ஆவணங்கள் பேசும் உண்மைகளைத் திரித்து அனுதாபம் தேடுவதை விட, முறையான மற்றும் பாதுகாப்பான இடத்தில் அனுமதி பெற்று மக்களைச் சந்திப்பதே உண்மையான அரசியல் நேர்மையாகும். அதை நாம் விஜயிடம் எதிர்பார்க்க முடியாது.
காரணம், 41 அப்பாவி மக்கள் கொடூரமாக கரூரில் இறந்த போதே தெறித்து ஓடியவர்தான் இந்த விஜய். அப்போதும் சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், அரசை விமர்சித்தவர் தான் இந்த விஜய். அதன்பிறகு, சிபிஐ விசாரணை கேட்டு டெல்லி சிபிஐ அலுவலகத்தின் படிகட்டுகளில் ஏறிய படி இருந்ததை மறந்து விட முடியாது.
தேர்தல் ஆணையம் தெளிவாக ‘சுவிதா’ என்ற செயலியில் பிரச்சாரம் செய்ய உள்ள நாளிலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், விண்ணப்பிப்வர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என மிகத் தெளிவாக கூறி விட்டது.
ஆனால், அரசை குறைகூறிக் கொண்டு என்ன செய்வதென தெரியாம திகைத்து வருகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய் என்பது தெளிவாக தெரிகிறது.
Also Read
-
10 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க : வெளியானது தொகுதிகளில் பட்டியல்!
-
#TNElection2026Breaking : காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகள் விவரங்கள் விவரங்கள்!
-
”அரசியலின் அரிச்சுவடு தெரியாதவர் விஜய்” : கி.வீரமணி விமர்சனம்!
-
CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி… RCB அணியுடன் தோனி விளையாட மாட்டார்.. என்ன காரணம்? - முழு விவரம் உள்ளே!
-
”பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க.. திருநர்களின் குரலை ஒடுக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி விமர்சனம்!