Politics
TN Elections 2026 : திமுக கூட்டணியில் 2 கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள்... எந்தெந்த கட்சிகள்? விவரம் உள்ளே!
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் நிலையில், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
அதிமுக - பாஜக கூட்டணி மக்களிடம் என்ன குறளிவித்தை காட்டினாலும், மக்கள் அதனை நம்பி ஏமாறமாட்டார்கள். அந்த வகையில் இந்த முறையும் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகள் இந்த முறையும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை குழு கடந்த ஜன.19-ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் தொடங்கப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதோடு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உறுப்பினர்கள் - கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் - அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் - எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், 2 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த இரண்டு தொகுதிகளும் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. அதோடு இதில் மனிதநேய மக்கள் கட்சி மட்டும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்த இரண்டு கட்சிகளை தொடர்ந்து மற்ற கட்சிகளுக்கும் விரைவில் எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகும்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!