Politics
“இதுதான் Anti Minority BJP அறிவித்திருக்கும் ‘ரம்ஜான் பரிசா?’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி வகிக்கும் மகாராஷ்டிரத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதன் தொடர்ச்சியாக, 2014-ல் கொண்டுவரப்பட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான 5% இடஒதுக்கிட்டை நீக்கியுள்ளது பா.ஜ.க அரசு.
இதனைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.
அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.
அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!
இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு Anti Minority BJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?
தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!
இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.
இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!
Also Read
-
நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமை உள்ளது… இறுதிப் போரை தொடங்கி உள்ளோம் - முரசொலி தலையங்கம்!
-
மதீஷா பதிரானா காயம்.. இலங்கை அணிக்கு மட்டுமில்லை இந்த அணிக்கும் அதிர்ச்சி.. காரணம் என்ன?- முழு விவரம்!
-
தமிழ்நாட்டு வீரர்களின் கனவை நனவாக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
Champions Of Tamil Nadu விழா : 1172 வீரர்களுக்கு ரூ.33.50 கோடி உயரிய ஊக்கத் தொகை வழங்கிய CM MK Stalin!
-
“இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!