Politics

"SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும் அண்டக் கொடுக்கிறார் அடிமை பழனிசாமி" - திமுக IT விங் விமர்சனம் !

பீகாரில் சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை (SIR) மேற்கொண்டது. இதில் சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த SIR நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்த SIR-க்கு தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி 8 நாட்களில் SIR பணிகளை முடித்துவிடலாம் என்று கூறியிருந்தார். ஆனால் 10 நாட்களில் 1.37% வாக்காளர்களுக்குதான் படிவங்களே வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ள திமுக IT விங் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை படித்த அதிமேதாவி பழனிசாமி அவர்கள், “SIR கணக்கீட்டு படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” என திருவாய் மலர்ந்திருந்தார். ஆனால், இன்றோடு 10 நாட்களாகியும் மொத்தமாகவே தமிழ்நாட்டில் 81.37% வாக்காளர்களுக்குதான் படிவங்களே வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் எத்தனை பேர் அந்த படிவங்களை நிரப்பியுள்ளனர், எத்தனை பேரிடம் திரும்ப பெற்றுள்ளனர் என எந்த தகவல்களும் இல்லை; மக்களுக்கு உதவி செய்ய அதிமுகவினர் களத்திலும் இல்லை. வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணை போகும் சதியில் பாஜகவுக்கு பழனிசாமியும் ஒரு பார்ட்னர் என்பது ஊரறிந்ததே; அதனால்தான் பாஜகவுக்கு முட்டுக் கொடுப்பது போல, தேர்தல் ஆணையத்துக்கும் அடிமை பழனிசாமி அண்டக் கொடுக்கிறார். ஆனால் அவரின் அற்ப செயலுக்கு தமிழ்நாட்டு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: “அ.தி.மு.க உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!