Politics

"கரூர் விபத்துக்கு திட்டமிட்டு விஜய் தாமதமாக வந்ததே காரணம்" - காவல்துறை FIR-ல் பகீர் தகவல் !

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று மாலையில் கரூரில் ரசிகர்களை சந்தித்தார். குறிப்பிட்ட நேரத்தை கடந்து அவர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நிலையில், அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பலர் ஒருவர் மேல் ஒருவரை மிதித்து சென்ற நிலையில், அந்த கூட்ட நெரிசல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியது. தொடர்ந்து ஏராளமானோர் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்தில் 41 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் திட்டமிட்டு விஜய் தாமதமாக வந்ததே என காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பலமணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்ததால், நீண்ட நேர காத்திருப்பு போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல்நிலையில் சோர்வடைவு ஏற்பட்டது. என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக அதிகளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா ? - கரூர் மாவட்ட மின்வாரியத் தலைமை பொறியாளர் விளக்கம் !