Politics
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்வியும், கண்டனமும் பின்வருமாறு,
பிரதமர் மீன்வளத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உண்மையான செலவுப் பகிர்வு முறை 60:40 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு திட்ட செலவில் 73 சதவீதம் வரை ஏற்பது ஏன் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன?
மாநிலங்கள் மீதான அதிகரித்து வரும் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு முறையான நிதிப்பகிர்வை பின்பற்ற வேண்டி தமிழ்நாட்டின் கோரிக்கையை இன்னும் பரிசீலிக்காதாது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!