Politics
“NIT, IIT, மருத்துவ நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப கால தாமதன் ஏன்?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 4) நாள் நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“NIT, IIT மற்றும் மருத்துவ நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப கால தாமதன் ஏன்?” என மக்களவையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி!
தேசிய தொழில்நுட்பக் கழகம்(NITகள்) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம்(IITகள்), சிறப்பு பல்நோக்கு மருத்துவ நிறுவனங்களில் காலியாக உள்ள மொத்த பணியிடங்கள் எத்தனை என்றும் அவை நிரப்பப்படாதது ஏன் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாலர் ஆ. ராசா எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவுகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக உள்ளது எனும் செய்தி குறித்த உண்மைத்தன்மை என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒதுக்கப்பட்ட பிரிவு இடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை என்ன?
“சுற்றுலாத் துறையை வளர்க்க நடவடிக்கை என்ன? என மக்களவையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி!
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உட்பட மாநில/யூனியன் பிரதேசங்கள் வாரியாக நாடு முழுவதும் சுற்றுலாத் திறனை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கு அரசு வழங்கும் நிதி உதவி உட்பட ஆதரவுகள் என்ன என்று திமுக பொருளாளர் டி. ஆர். பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு சுற்றுலாவை மீட்டெடுப்பதில் அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளின் விவரங்கள்? என்றும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!