Politics
கட்டுக்கட்டாக பணம் : நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக இம்பீச்மென்ட் தீர்மானம்... அப்படி என்றால் என்ன ?
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்துக்கே அவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனிடையே பண குவியல் விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான இம்பீச்மென்ட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் அனைத்து கட்சிகளும் இணைந்து 145 எம்.பி.கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மீது விவாதம் நடத்தும் முன்னதாக விதிமுறை படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழு அமைக்க வேண்டியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, மூத்த பிரபல சட்ட வல்லுநர் ஒருவர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு அமைப்பது குறித்து மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆகியோர் ஆலோசனை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த குழு விசாரணை நடத்தி பரிந்துரை வழங்கிய பின்னர் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீர்மானம் விவாதத்துக்கு கொண்டுவரப்படும் நிலையில், மூன்றில் இரண்டு மடங்கு நாடாளுமன் உறுப்பினர்கள் வாக்களித்தால் நீதிபதி பணி நீக்கம் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பொதுப்பணித்துறையின் சாதனைகள்... வரலாற்றில், ‘’ஸ்டாலின் கட்டடக் கலை’’ என புகழப்படும்!
-
“நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!
-
“வரலாற்று புத்தகங்களில் தென்னிந்தியர்களின் வரலாறு மறைப்பு!” - கீழடி குறித்து மார்க்கண்டேய கட்ஜு கருத்து!
-
“தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் தலைநிமிர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவுகின்றதா? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!