Politics
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒன்றிய பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவு... மாற்றப்படுகிறாரா ஆளுநர் ரவி ?
பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு 2023 ஆண்டு தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போதே மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ள ஆளுநரின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து சில மசோதாக்கள் மீது அனுமதி வழங்கினார். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது 2 மசோதாக்கள் மீது அனுமதி வழங்கிவிட்டு 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். இந்த விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி குடியரசு தலைவரிடம் நிலுவையில் உள்ள 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி உள்ளது நாடுமுழுவதும் பரபரப்பாகி உள்ளது. இது ஆளுநருக்கு மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநரின் ஆலோசனை படி ஒன்றிய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில், ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சூழலை ஆளுநர் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்து ஒன்றிய அரசு வட்டாரத்தில் வலுத்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. இதனை தொடர்ந்து அவரை திரும்ப பெற ஒன்றிய அரசு ஆலோசனை தொடங்கி உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!