Politics
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரம் : பாஜக கூட்டணியில் மோதல்... பரபரப்பான பீகார் அரசியல் களம்!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோதமானவற்றையே செய்து வருகிறது. மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., உள்ளிட்டவற்றை கொண்டு வந்ததோடு, வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மும்முரம் காட்டியது. இதற்கு நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இஸ்லாமியர்களும் போராட்டம் நடத்தினர்.
நாட்டிலேயே பாதுகாப்புத் துறை, ரயில்வே துறைக்கு அடுத்து வக்ஃபு சட்டத்தில்தான் அதிகமான சொத்து இருப்பதாக கூறி அதனை பறிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டியதோடு, நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஏப்.2-ம் தேதி மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று, நள்ளிரவு 2 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பாஜக மற்றும் அதன் சில கூட்டணி கட்சிகள் என மொத்தம் 288 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதே வேளையில் இந்த மசோதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 232 பேர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பான்மை பெற்ற பாஜக இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேறியது.
தொடர்ந்து ஏப். 3-ம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 128 பேரும், எதிராக 95 பேரும் வாக்களித்தனர். வழக்கம்போல் பெரும்பான்மை பெற்ற பாஜக, இந்த மசோதாவை மாநிலங்களைவையிலும் நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்ததோடு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இதனை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்கள் போராட்டங்கள் எழுந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் இதன் போராட்டம் தீவிரமாகியுள்ளது.
இந்த சூழலில் “வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராடுபவர்கள் தேசத்துரோகிகள். இந்த போராட்டம் நடத்துவோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று பாஜகவைச் சேர்ந்த அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், பாஜக கூட்டணியான ஐக்கிய ஜனதா தள கட்சியின் மேலவை உறுப்பினர் குலாம் கோஷ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் மேலவை உறுப்பினர் குலாம் கோஷ், “கொலைகாரர்கள் நீதிமான்களாக இருக்கும்போது நீதிக்கு யாரிடம் செல்வது?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் “பாஜகவுக்கு உண்மையிலேயே இஸ்லாமியர்கள் நலன் மீது அக்கறை இருந்தால், ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அகில இந்தியா தனிநபர் சட்ட வாரியம் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், எல்.ஜே.பி, ஆர்.எல்.டி கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவான மசோதா என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!