Politics
“வக்ஃப் திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் முதலமைச்சரோடு துணை நிற்போம்!” : அரசியல் தலைவர்கள் ஆதரவு!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோதமாக மட்டுமின்றி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., உள்ளிட்டவற்றை கொண்டு வந்ததோடு, வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மும்முரம் காட்டியது. இதற்கு நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இஸ்லாமியர்களும் போராட்டம் நடத்தினர்.
மேலும் நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், இதற்கு எதிராக ஒருமித்த குரலையும் எழுப்பினர். இருப்பினும் நேற்று (ஏப்.02) வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று நள்ளிரவு 2 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பாஜக மற்றும் அதன் சில கூட்டணி கட்சிகள் என மொத்தம் 288 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதே வேளையில் இந்த மசோதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 232 பேர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பான்மை பெற்ற பாஜக இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.
இதனைக் கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண்டனத் தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது “சட்டப்படி, வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப்பெற போராடுவோம். அதில் வெல்லவும் செய்வோம்” என தெரிவித்தார்.
இதனை ஆதரத்து பேசிய அரசியல் தலைவர்களின் கருத்துகள் பின்வருமாறு, “இந்தியாவில் வாழும் 32 கோடி இஸ்லாமிய மக்களின் வாழ்வுரிமையை பறித்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை எதிர்த்து உரிமைகளை காக்க முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். - த.வா.க தலைவர் வேல்முருகன்!
இந்தியாவில் மத நல்லிணக்கம் நிலவுவது, ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு பிடிக்கவில்லை என்பதால்தான் மத ரீதியாக மக்களை பிரிக்கிறார்கள். ஆனால், அதனை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். - கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ. ஆர். ஈஸ்வரன்!
இஸ்லாமியர்களுடைய கண்ணீரை முதலமைச்சர் மொழிபெயர்த்திருக்கிறார். வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு எதிராக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வி.சி.க ஆதரிக்கிறது. - ம.ம.க எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன்!
பா.ஜ.க.வின் பாசிச வெளிப்பாடுதான் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம். ஆனால், இதுபோன்ற பாசிச நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாடு வேறுபட்டு இருக்கிறது. - தி.மு.க எம்.எல்.ஏ அப்துல் சமது!
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் பாஜக தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இறுதியில் வெற்றி பெறப்போவது மதச்சார்பற்ற சக்திகள்தான். - CPI(M) நாகை மாலி!
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக சட்டப்பேரவையில் கண்டனம் எழுப்பியிருக்கிற முதலமைச்சருக்கு நன்றி. - CPI மாரிமுத்து!
இஸ்லாமியர்களும் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களுக்கு எதிரான திருத்த மசோதாவிற்கு எதிரான முதலமைச்சரின் தீர்மானத்தை வழிமொழிகிறேன். - பா.ம.க தலைவர் கோ. க. மணி!
வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். அதற்கெதிராக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அ.தி.மு.க ஆதரவு அளிக்கும். - அ.தி.மு.க எம்.எல்.ஏ வேலுமணி!”
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!