Politics

ஒன்றிய பா.ஜ.க அரசின் நிதி வஞ்சிப்பு! - தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் கிளர்ந்தெழுந்த உரிமை குரல்!

தமிழ்நாடு அரசு, பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் திட்டங்களுக்கு உரிய நிதி வழங்கி, மக்கள் நலன்களுக்காக செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகின்றன.

ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து பெரும் தொகையினை வரியாகப் பெறும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மக்கள் நலன் பெறக்கூடிய வாழ்வியல், கல்வி, சுகாதாரம் சார்ந்த அடிப்படை துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு கூட மனமில்லாமல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கான ஊதிய நிதியை வழங்காமல், அதாவது சுமார் ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் ஊழியர்களை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இதனைக் கண்டித்து தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு, ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த போது, முத்தமிழறிஞர் கலைஞர் டெல்லி சென்று, “விவசாயிகள், விவசாயம் நடைபெறாத இடைப்பட்ட காலத்தில் வருமானம் பெற என்ன செய்வார்கள், அவர்களின் வாழ்வாதரத்தை காப்பதற்கான நாம் ஒரு திட்டத்தை கொண்டு வரவேண்டும்” என கோரிக்கையை முன்வைத்தார். அதன் விளைவாய் உருவான திட்டம்தான், 100 நாள் வேலைத்திட்டம்.

ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம், முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் திட்டம். இதற்கான 100% நிதியையும் ஒன்றிய அரசுதான் தர வேண்டும். ஆனால், அந்த நிதியை கடந்த 5 மாதங்களாக தமிழ்நாட்டிற்கு வழங்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய, சுமார் ரூ.4,034 கோடி ஊதிய நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால், அதற்களித்த ஒன்றிய அரசின் பதில் கடித்தத்தில், நிதி வழங்காததற்கான காரணத்தை தவிர, மற்ற தேவையற்ற செய்திகளே இடம்பெற்றுள்ளன” என்றார்.

Also Read: “தாய்மொழியின் அருமையை கற்பிக்க வேண்டும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உகாதி திருநாள்’ வாழ்த்து!