Politics
“தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக சவுக்கடியா?” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு கிண்டல்!
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கொளத்தூரில் அலங்கார மீன் வர்த்தக மையம் ரூ.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, "வண்ண மீன்கள் உற்பத்தி செய்வதற்கும் அவருடைய தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வைப்பதற்கும் தனியாக ஒரு அங்காடி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள்.
நான்கு ஏக்கர் பரப்பளவில் 180-க்கும் மேற்பட்ட வியாபாரம் செய்வதற்கு உண்டான கடைகளும் அந்த தொழிலுக்கு தேவையான உபகரணங்களை கொல்வது செய்வதற்கு உண்டான கடைகளும் அதேபோல் வருகின்றவர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய முனையம் ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உண்டான முயற்சிகளை தொடர்ந்து ஆய்வுகள் மூலமாக பணியினுடைய முன்னேற்றத்தை தொடர்ந்து ஆய்வு செய்திருக்கிறோம்." என்றார்.
=> தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை காலில் செருப்பு அணிய மாட்டேன் சாட்டையால் அடித்துக் கொள்வேன் என்பது தொடர்பான கேள்விக்கு??
"சபரிமலை மண்டல காலம் முடிந்து அடுத்த மகர விளக்கு பூஜை காலம் தொடங்க இருக்கிறது. ஒரு சிலர் விரத காலங்களில் மாலை அணிந்து கொண்டு இருப்பவர்கள் காலிலே செருப்பு போடாமல் இருப்பார்கள். நான் கூட மலை ஏறும்போது காலில் செருப்பு அணிய மாட்டேன். அவர் இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பெற்ற தோல்விக்கு பரிகாரம் தேடவில்லை. அவர் கொடுத்த பேட்டிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். நிச்சயமாக கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். திமுக 40 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்காது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஜெயித்து விடுவோம் என்று அவர் கூறிய பேட்டியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று உறுதி தந்தாரே அதற்கு பிராயச்சித்தமாக இந்த சவுக்கடிக்கு செல்கிறாரா என்று தெரியவில்லை.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் அத்துமீறல் விவகாரத்தில், குற்றம் விளைவித்தவர்களை புகார் பெற்றவுடன் குற்றவாளிகளை 3 மணி நேரத்தில் கைது செய்திருக்கிறோம்.
உத்திர பிரதேசத்தில் ஒரு சாமியார் கூட்டிய கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இதுவரையில் அந்த சாமியார் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எத்தனை நாட்கள் போராட்ட களத்தில் இருந்தார்கள்? அவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதா? மணிப்பூரில் வன்முறைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வன்முறை இதுவரையில் உலகத்தில் எங்கும் நடைபெறாத அளவுக்கு இதயங்கள் குலுங்கி அழுகின்ற அளவிற்கு ஏற்பட்ட கொடுமைகளை பார்த்திருப்பீர்கள். பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்திற்கு எப்பொழுது வழக்கு பதிவு செய்தார்கள். புகார் பெறுவதற்கு கூட கடந்த ஆட்சி முன் வரவில்லை எத்தனை நாட்கள் கழித்து புகார் பெற்றார்கள் கைது நடவடிக்கை ஈடுபட்டார்கள்.
நடந்த சம்பவத்திற்கு நிச்சயமாக எல்லோரும் வருத்தப்படுகிறோம். இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்க கூடாது என்று முதல்வர் தீவிரமாக உத்தரவிட்டு காவல்துறையை முடுக்கிவிட்டு இருக்கிறார். நடந்த சம்பவத்திற்கு உடனடியாக பரிகாரம் தேடப்பட்டிருக்கிறது.
நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட வரை இன்னார் என்று பார்க்காமல் உடனடியாக கைது நடவடிக்கை ஈடுபட்டு அவரை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி இருக்கிறோம் முதலமைச்சர் கூட குற்றவாளிகளை விரைந்து விசாரித்து சட்டத்திற்கு ஆட்பட்டு குற்றத்திற்கு உண்டான நீதிமன்றம் வாயிலாக பெற்று தருவோம் என்று கூறியிருக்கிறார்.
நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது ஆனால் அதற்குண்டான நடவடிக்கைகளில் இந்த அரசு எட்டுக்கால் பாய்ச்சல் எடுத்திருக்கிறது. நாடே மனசாட்சி உள்ளவர்கள் நடுநிலையாளர்கள் இதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு எப்படி சுதந்திரமாக நடமாட முடியும்?
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு எடுத்துச் செல்கிறபோது அதற்குண்டான FIR-ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அந்த வகையில் ஏதாவது வெளியாகி இருக்கலாம்." என்றார்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!