Politics

"அம்பேத்கர் என்பவர் வெறும் படம் அல்ல, அனைவருக்கும் அவர் ஒரு பாடம்"- ஆசிரியர் கி.வீரமணி !

சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் "அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்" என்னும் பெயரில் சிறப்புப் பொதுக் கூட்டம் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாட்டு மக்களுக்கு அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது பெரியார் தான் எனவும் பெரியாரும் அம்பேத்கரும் ஒரே கொள்கையில் பயணித்ததாகவும் தெரிவித்தார். மேலும், வெறும் படம் அல்ல, அனைவருக்கும் அவர் ஒரு பாடம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் அம்பேத்கர் பெரியாரை நான்கு முறை சந்தித்துள்ளார் எனவும் வேறு எந்த தலைவரையும் பெரியார் அத்தனை முறை சந்தித்தது இல்லை என தெரிவித்தார். அதோடு "அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர்" என பெரியார் குறிப்பிட்டுட்டுள்ளதாகவும் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாசிசத்திற்கான (fascism) வழி எனவும், அரசியலமைப்பு சட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை பாஜகவினர் செய்து வருவதாகவும் விமர்சித்தார் ஆர்எஸ்எஸின் யுக்திகள் மாறிக்கொண்டே இருக்கும் எனவும் மற்ற தலைவர்களை அவர்களால் நெருங்க முடியும் ஆனால் பெரியாரை என்றுமே அவர்களால் நெருங்க முடியாது எனவும், அம்பேத்கருக்கும் திராவிட கழகத்திற்குமான உறவு ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல எனவும் தெரிவித்தார்.

Also Read: பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் UGC -NET தேர்வு : எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? -சு.வே கேள்வி !