Politics
மகாராஷ்டிர தேர்தல் : RSS தலைமையகத்தில் Road Show நடத்திய பிரியங்கா காந்தி.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடையும் நிலையில், வரும் நவம்பர் 20-ம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரே அணியாக போட்டியிடவுள்ளது.
அதே நேரம் பாஜக, சிவசேனாவில் இருந்து பிரிந்த ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்த அஜித் பவார் பிரிவு ஆகியவை ஒரே அணியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எனினும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பாஜகவின் தாய் அமைப்பான RSS- தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் ரோடு ஷோ நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பிரியங்கா காந்திக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேரணியின் இடையே புகுந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக கோஷமெழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் தொண்டர்களும் கோஷமெழுப்பியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் தொண்டர்களை அமைதி காக்குமாறு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க நண்பர்களுக்கு வணக்கம். தேர்தலுக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். ஆனால் தேர்தலில் எங்கள் மகாவிகாஷ் அகாடி கூட்டணிதான் வெற்றி பெறும்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், " மகாராஷ்டிராவிற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் குஜராத்திற்கு சென்றுள்ளது. இதனால் மகாராஷ்டிரா 10 லட்சம் கோடி முதலீட்டையும், லட்சம் வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளது" என்று கூறினார்.
Also Read
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!