Politics
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் : இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவிப்பு !
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அதன் முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். ஆனால் சிவசேனாவின் இருந்த அதிருப்தி அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவை வைத்து பா.ஜ.க அரசியல் ஆட்டம் ஆடியது.
சிவசேனா எம்.எல்.ஏக்களை வளைத்த ஏக்நாத் ஷிண்டே, அவர்களை அசாம் அழைத்து சென்று தங்க வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது.அதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித்பவார் மூலம் உடைத்து அவரது எம்.எல்.ஏக்களையும் தங்கள் கூட்டணிக்குள் இணைத்து, அஜித்பவாருக்கு துணை முதலமைச்சர் வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடையும் நிலையில், வரும் நவம்பர் 20-ம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு இந்தியா கூட்டணி ஒரே அணியாக போட்டியிடவுள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா செய்தித்தொடர்பாளர் முகுந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியா கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சிக்கும் சீட் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவதை விட பா.ஜ.க கூட்டணி அரசை அகற்றுவதே முக்கியம் என்பதால் தேர்தலில் போட்டியிடாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!