Politics
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு : ஆம் ஆத்மி MLA-க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு !
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அவர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. அந்த வழக்கில் ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்து ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், ” டெல்லியில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஆனால் மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன். எனவே இன்னும் இரண்டு நாட்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு நீடித்த நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் மாநில கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி மர்லேனா டெல்லியின் அடுத்த முதல்வராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டார்.
இதன் மூலம் டெல்லியின் மூன்றாவது சுஸ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெல்லியின் மூன்றாவது முதலமைச்சர் என்ற பெருமையை அதிஷி மர்லேனா பெற்றுள்ளார். அதிஷி விரைவில் ஆளுநரை சந்தித்து டெல்லியின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!