Politics
பா.ஜ.கவுக்கு எதிராக தேர்தல் களத்தில் வினேஷ் போகத் : ஹரியானா தேர்தலில் போட்டி!
பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து கடந்த ஆண்டு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் முகமாக வினேஷ் போகத், சாக்சி மாலிக் ஆகியோர் இருந்தனர்.
நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்களுக்கு நீதி இன்று வரை கிடைக்காமல் இருக்கிறது. இன்று வரை பிரிஜ் பூஷன் மீது எந்த விதமான நடவடிக்கையும் பா.ஜ.க அரசு எடுக்காமல் இருந்து வருகிறது. மேலும் மல்யுத்த வீரர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மோடி அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பைத்தான் அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் மீது காட்டியது ஒன்றிய அரசு. மல்யுத்தத்தில் இறுதிபோட்டிக்கு முன்னேறி வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடு எதிர்பார்த்தது. ஆனால், அவர் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வினேஷ் பேகத் இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வெள்ளி பதக்கத்திற்கு கூட ஒன்றிய அரசு போராட முன்வரவில்லை. ”பதக்கம் வென்று பிரதமர் மோடியை நான் நேரில் சந்திப்பேன்” என்று வினேஷ் போகத் கூறி இருந்தார். இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது நியாயமான உரிமையை ஒன்றிய அரசு பரித்து விட்டது.
பின்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து நாடு திரும்பியபோது கூட ஒன்றிய அரசு அவரை வரவேற்கவில்லை. இந்நிலையில், தற்போது ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்யும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கேவை வினேஷ் போகத் நேரில் சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று டெல்லியில் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஹரியானா தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி 31 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜுலானா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!