Politics
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ் : வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் !
ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக சார்பில் முதலமைச்சராக நவாப் சிங் சைனி உள்ளார். ஹரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியோடு சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடையவுள்ளது.
இதன் காரணமாக ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. லோக்போல் (LokPoll) நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் 67,500 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 46 முதல் 48 சதவீத ஓட்டுகளுடன் 58 முதல் 65 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்று கூறியுள்ளது. அதே நேரம் பாஜக 25 முதல் 37 சதவீத ஓட்டுகளுடன் 20 முதல் 29 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும், பிற காட்சிகள் 3 முதல் அதிகபட்சமாக 5 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !