Politics
1.5 ஆண்டுகளுக்கு பிறகு... ஜாமீனில் வெளியே வந்தார் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா !
பாஜக ஆளாத மாநிலங்களை தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாஜக குறிவைத்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதாவது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை ஏவி, எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பாஜக குறிவைத்தது.
அதன்படி டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், கடந்த 2023 பிப்.26-ல் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இதுகுறித்து மேல்முறையீடு ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த சூழலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி நேற்று (ஆக.09) உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு திஹார் சிறையில் இருந்து விடுதலையானார். சுமார் 17 மாதம் (1.5 ஆண்டுகள்) கழித்து சிறையில் இருந்து விடுதலையான மணீஷ் சிசோடியாவுக்கு தொண்டர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
முன்னதாக இதே வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து முறைகேடு வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!