Politics
அனுராக் தாக்கூர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல வரையறைகள் முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்துவதாகவும், உழைக்கும் மக்களை பொருளியல் அளவில் வஞ்சிக்கும் அளவிலும் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்திய பொருளாதாரத்தை பொருத்தமட்டில், அம்பானி - அதானி என்கிற இருவர் பெரும் ஆளுமையை செலுத்துகின்றனர் என்றும் விமர்சித்தார்.
அப்போது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூவும், சபாநாயகர் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இடைமறித்து தருக்கமிட்டனர்.
அம்பானி - அதானியை காக்கும் இடத்தில் ஏன்? சபாநாயகரும், ஒன்றிய அமைச்சரும் இருக்கிறார்கள் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவத்தொடங்கியது.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “2021இல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்போடு கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என கோரியதை சுட்டிக்காட்டு, பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் “சாதிப்பெயர் தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறார்” என ஏளனமாக நகையாடினார்.
இதனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக மக்களவையில் இன்றும் (31.07.24), இந்தியா கூட்டணி மக்களவை உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து முழக்கமிட்டனர்.
குறிப்பாக, தரக்குறைவாகவும், ஏளனத்துடனும் பேசும் அனுராக் தாக்கூர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
எனினும், உரிமை மீறல் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு, அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார் சபாநாயகர் ஓம் பிர்லா.
இதற்கு, தேசிய அளவில் எதிர்ப்புகள் எழத்தொடங்கியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ராகுல் காந்தியை அவமதிப்பதற்காக அனுராக் தாக்கூர் வேண்டுமென்றே பேசுகிறார். எல்லோருடைய சாதியையும் கேட்பார்களா. இது தவறு. இதை நான் கண்டிக்கிறேன்.எங்கு பேச வேண்டும், யாரை காக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி அறிந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, உணர்வுகளை தூண்டிவிட்டு பேசி வருகிறார். இதை நாடாளுமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!