Politics
கன்வார் யாத்திரை : உ.பி அரசின் அறிவிப்பால் வேலையில் இருந்து நீக்கப்படும் இஸ்லாமியர்கள்... பின்னணி என்ன ?
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் வெளிவந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் கடைகளின் முன்னர் உரிமையாளர்களின் பெயர்களை எழுத வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வடஇந்தியாவில் சூலை முதல் ஆகஸ்டு வரை முப்பது நாட்கள் பக்தர்கள் அரித்துவார், கங்கோத்திரி, கேதார்நாத், வாரணாசி, போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கொள்வர். கன்வார் யாத்திரை என அழைக்கப்படும் இந்த யாத்திரை பகுதியில் இருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் பெயரை கடையின் முன்னர் எழுதிவைக்கவேண்டும் என உத்தரப்பிரதேச பாஜக அரசு உத்தரவிட்டது.
இதன் மூலம் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள் இஸ்லாமிய கடைகளை புறக்கணிக்கும் வகையில் இந்த் உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. பாஜக கூட்டணி கட்சிகளே இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கன்வார் யாத்திரை நடக்கும் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச பாஜக அரசின் அறிவிப்பால், இந்த பகுதியில் இருக்கும் கடைகளில் இனி இஸ்லாமியர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலில் கடைகளில் இஸ்லாமியர்கள் இருந்தால் அது வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் கடை உரிமையாளர்கள் இஸ்லாமியர்களை வேலையில் இருந்து நீக்கி வருவதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!