Politics
தப்பித்து ஓடுவதில் ஈடு இணையற்ற NDA நிர்வாகிகள் : பெண்களுக்கு நேரும் அநீதி!
குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் பெயர்போன கட்சியாக பா.ஜ.க இருக்கிறது என்பதற்கு பிரிஜ் பூஷன், சுவேந்து அதிகாரி, அமித்ஷா, எரியூரப்பா உள்ளிட்டோர் எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர்.
எனினும், பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும், அதற்கு விதிவிலக்கு இல்லை என்பது ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு, அதிலிருந்து அவர்கள் தப்பித்து ஓடும் செய்திகளும் முதன்மை செய்திகளாகி வருகின்றன.
அதன்படி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய NDA கூட்டணி கட்சியான JD(S)-ன் மக்களவை வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா எளிதாக வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றார்.
தடுத்து நிறுத்த வேண்டிய இடத்தில் இருந்த ஒன்றிய பா.ஜ.க, கூட்டணியை காக்கவேண்டும் என்ற சுயநலத்துடன் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல், குற்றத்திலிருந்து பிரஜ்வல் ரேவண்ணாவை காக்கவும் பல வேலைகள் பார்த்தது.
எனினும், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடும் கண்டனங்களுக்கு பிறகு, வேறு வழியின்றி பிரஜ்வல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்து, தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மற்றொரு NDA கூட்டணி கட்சியான சிவசேனா (ஷிண்டே) கட்சியின் மூத்த தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா, 45 வயதுள்ள காவேரி என்கிற பெண்ணை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றி கொன்றுவிட்டு, தலைமறைவாக இருக்கிறார்.
இதனால், குற்றங்களை இழைப்பதும், அதிலிருந்து தப்பி ஓடுவதும், எடியூரப்பா போன்ற பா.ஜ.க.வினரின் உத்தி மட்டுமல்ல, கூட்டணி கட்சியில் இருப்பவர்களின் உத்தியும் தான் என அம்பலமாகியுள்ளது.
இவர்களிடம் உள்ள வெறுக்கத்தக்க ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவரும், பெண்களுக்கு எதிராக அநீதி இழைத்தவர்கள் என்பது தான்.
இது குறித்து, இந்தியா கூட்டணியின் சிவசேனா (தாக்கரே) கட்சி எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “சொகுசு வாகனத்தால் ஒரு பெண்ணை இடித்துவிட்டோமே, அவர்களின் உயிரை காக்க வேண்டுமே என்ற எண்ணம் இல்லாமல், தன்னை காத்துக்கொள்ள, நேர்ச்சிக்கான அடையாளங்களை மறைக்க நினைத்த சிவசேனா (ஷிண்டே) கட்சியினரின் செயல், மனிதத்தன்மையற்றது, வெட்கப்பட வேண்டியது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காவேரி என்ற பெண்ணை சொகுசு வாகனம் ஏற்றி கொன்றவரை நிரபராதியாக்க வேலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, குற்றவாளி மிஹிர் ஷா, தேடப்பட்டு வருகிறார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!