Politics
நாடாளுமன்றத்தில் கடும் அமளி : நீட் முறைகேட்டில் விவாதம் செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு!
நீட் தேர்வு முறையில் இருக்கிற சிக்கல்களை, எதிர்த்து தமிழ்நாட்டில் எழத் தொடங்கிய குரல், தற்போது இந்தியாவின் குரலாக எதிரொலித்து வருகிறது.
அவ்வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக,
1. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
2. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
3. இந்தியாவே நீட் தேர்வை எதிர்த்து வரும் நிலையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்திலும் நீட் எதிரொலி ஓங்கி ஒலித்தது.
நீட் தேர்வினால், மாணவர்கள் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு விடை காணப்படும் வகையில், ஆக்கப்பூர்வமான விவாதம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினர் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வலியுறுத்தினர்.
ஆனால், அதனை பொருட்படுத்தாமல், நீட் ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க, இரு அவை தலைவர்களும் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டு, அமளியில் ஈடுபட, இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்திய மாணவர்களிடையே நிலவி வரும் நீட் தேர்வு சிக்கல்களை, நாடாளுமன்றத்தில் அமைதி முறையில் விவாதம் செய்ய வேண்டும். அதில் பிரதமர் மோடியும் தனது பங்கை அளித்திட வேண்டும்” என தெரிவித்தார்.
எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கம் என்பது போல, சிக்கல் குறித்த விவாதத்திற்கு பயந்து, அமைதி காத்து வருகின்றனர், ஒன்றிய பா.ஜ.க.வினர்.
Also Read
-
'அ.முத்துலிங்கம் இயல் விருது' - ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கான அங்கீகாரம் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
“நீட் தேர்வு ரத்து என்பதே ஒரே தீர்வு” : மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேச்சு!
-
சமஸ்கிருதத்திற்கு 6,100 - தமிழுக்கு 12 : ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதி - ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!
-
“தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3ம் இடம்.. ஆளுநரை எதிர்க்க தவெக அரசு அஞ்சுவது ஏன்?”
-
“மேகதாது விவகாரம்.. படவசூல் பாதிக்கும் என.. தமிழ்நாட்டின் உரிமை அடகுவைப்பு” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!