Politics
EVM-ஐ Hack செய்து வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்... அம்பலமான தேர்தல் முறைகேடு !
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. .
கூட்டணி கட்சிகளின் உறுதுணையோடு மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராகியுள்ளார். எனினும் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசத்தில் பெருமளவு பின்தங்கியுள்ளது பாஜக. நாடு முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்து வரும் நிலையிலும், பாஜக தில்லுமுல்லு வேலைகளை செய்து இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலின்போது, பாஜகவினர் வாக்குச்சாவடிக்குள் சென்று பாஜகவுக்கு ஆதரவாக பலமுறை வாக்களித்தது, சிறுவனை அழைத்து சென்று வாக்களிக்க வைத்தது, இஸ்லாமியர்களை தாக்கி அவர்கள் வாக்கை பாஜகவுக்கு அளித்தது என பல்வேறு முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆதாரபூர்வ செய்திகள் வெளியானபோதிலும், தேர்தல் ஆணையம் சில விஷயங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சூழலில் தற்போது பாஜக கூட்டணி வேட்பாளர், வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 30 இடங்களையும் பாஜக கூட்டணி 17 இடங்களையும் பிடித்துள்ளது. இதில் பாஜக கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது மும்பை வட மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஷிண்டேவின் சிவசேனா வேட்பாளர் ரவீந்திர தத்தாராம் வாய்க்கர் (RAVINDRA DATTARAM WAIKAR), மின்னணு இயந்திரத்தை ஹேக் செய்து வெற்றிபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவிந்திர வாய்க்கரின் உறவினர், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கொண்டு சென்ற செல்பேசியை கொண்டு தபால் வாக்குகள் எண்ணிக்கையை செல்பேசியின் OTP அனுப்பி hack செய்து வென்றிருப்பது அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து தற்போது இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!