Politics
140 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைத் தரவுகளில் முரண்பாடு உள்ளது - The Wire ஊடகத்தின் செய்தியால் அதிர்ச்சி !
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களை தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வகை செய்யும் வகையில் விவிபேட் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் யார் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. மேலும், மாதிரி வாக்குப்பதிவில் மற்ற வேட்பாளர்களுக்கு பதிவாகும் ஓட்டுகள் பாஜகவுக்கு சென்றதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டது. ஆனால், அது சரி செய்யப்படும் என்று கூறியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும், பதிவான வாக்குகளுக்கும் இருக்கும் வித்தியாசம் குறித்த விவரத்தை தி வயர் ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், மொத்தம் 140 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சில தொகுதிகளில் அங்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களில் பதிவான எண்ணிக்கையை விட வாக்கு எண்ணிக்கை அதிகமாக அமைந்துள்ளது. இன்னும் சில தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன என்று அந்த செய்தி கூறியுள்ளது.
Also Read
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!
-
"உலக மயமாகிக் கொண்டுள்ளார் தந்தை பெரியார்" - ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி !
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!