Politics
'அக்னிபாத்' திட்டத்துக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு : பாஜகவுக்கு தொடரும் சோதனை !
ஒன்றிய பாஜக அரசு ராணுவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள் என்றும், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வேலையை விட்டு அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த திட்டத்தை எதிர்த்து பீகாரில் தொடங்கிய போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.
மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பாஜக தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மாற்றம் லோக் ஜனசக்தி கட்சிகள் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளன. அக்னிபாத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரானகே.சி.தியாகி, "அக்னிபாத் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பொது சிவில் சட்டம்(UCC) குறித்து அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதே போல பீகாரில் உள்ள பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவும் மிக முக்கியம் என்பதால் பாஜக இந்த கோரிக்கையை ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!