Politics
"அயோத்தி மக்கள் துரோகம் செய்தவர்கள்" - பாஜக தோல்வியை குறிப்பிட்டு ராமாயாண சீரியல் நடிகர் புலம்பல் !
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களில் வென்று அதிரடி காட்டியது.
எனினும் இதனைவிட ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில் பாஜக தோல்வியை தழுவியது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி பைசாபாத் மக்களவை தொகுதியில் அமைந்துள்ள நிலையில், அங்கு சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.
இந்த நிலையில், ஒட்டுமொத்த நாடும் இனி அயோத்தி மக்களை மரியாதையுடன் பார்க்காது என ராமாயாணம் டி.வி சீரியலில் லட்சுமணனாக நடித்த நடிகர் சுனில் லஹ்ரி கூறியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்ட அயோத்தியை சேர்ந்த அதே மக்கள்தான் இவர்கள் என்பதை மறந்துவிட்டோம்.
கடவுளையே மறுப்பவர்களை என்னவென்று அழைப்பது? அவர்கள் சுயநலவாதிகள். அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம். சிறிய குடிலில் இருந்து ராமரை வெளியில் கொண்டு வந்து அழகான கோயிலில் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்த மன்னனை நீங்கள் காட்டிக்கொடுத்ததில் நாங்கள் அதிர்ச்சியடையவில்லை. ஒட்டுமொத்த நாடும் இனி உங்களை மரியாதையுடன் பார்க்காது” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !