Politics
தேர்தல் பணியில் உயிரிழந்த 6 ராணுவ வீரர்கள் : தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள் !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழ்நாடு போன்ற முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 7 கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வழக்கத்துக்கு மாறாக இந்த நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த முடிவு செய்த தேர்தல் ஆணையத்தின் செயல் ஆரம்பத்தில் இருந்தே விமர்சிக்கப்பட்டது.
இந்த தேர்தல் பணிக்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டனர். இப்படி பணியில் அமர்த்தப்பட்ட ராணுவ வீரர்கள் 6 பேர் தற்போது உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மிர்ஷாபூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 23 ராணுவ வீரர்களில் 8 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வடமாநிலங்களில் கடும் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ராணுவ வீரர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த ராணுவ வீரர்களுக்கு அதிக காய்ச்சல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!
-
"உலக மயமாகிக் கொண்டுள்ளார் தந்தை பெரியார்" - ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி !