Politics
வாக்குப்பதிவு சதவீதம் திடீரென 6 % உயர்ந்தது எப்படி ? - தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி !
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களை தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வகை செய்யும் வகையில் விவிபேட் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் யார் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால், அதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதியும் நடைபெற்றது.
ஆனால், வாக்குப்பதிவின் இறுதி கட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் காலதாமதம் செய்து வந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு இறுதி வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதில் ஏற்கனவே முதல் கட்டத் தேர்தலில் 60 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு என்று கூறிய நிலையில் தற்போது 66.14 % வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டாம் கட்ட தேர்தலில் 60.96% வாக்குப்பதிவானதாக 26 ஆம் தேதி அறிவித்த நிலையில் தற்போது 66.71% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திடீரென்று இரண்டு கட்ட தேர்தல்களிலும் தற்போது 6% உயர்வு ஏற்பட்டது எப்படி? என்ற கேள்வியை பல்வேறு தரப்பிலும் எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்ல வாக்குப்பதிவு சதவீதத்தை மட்டும் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளனர்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !