Politics
பணக்குவியலில் படுத்திருக்கும் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி... வெளியான புகைப்படத்தால் குவியும் கண்டனங்கள் !
ஒன்றியத்தில் பாஜக அரசு அமைக்கும்போது, ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக அளித்தது. மேலும் கருப்பு பணத்தை கண்டறிந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் அனுப்பப்படும் என்றும் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அதில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வழக்கம்போல் இதேபோல் வாயால் வடை சுட பாஜக தயாராகி வருகிறது. இந்த சூழலில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் பணக்குவியலில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலத்தில் பாஜகவின் NDA கூட்டணியில் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) கட்சி உள்ளது. இதன் தலைவராக பிரமோத் போரோ இருந்து வருகிறார். இந்த சூழலில் இந்த கட்சியின் முக்கிய நிர்வாகியும் கிராம சபை வளர்ச்சிக் குழுவின் தலைவருமான பெஞ்சமின் பாசுமதரி (Benjamin Basumatary) ரூ.500 நோட்டுகள் இருக்கும் பணக்குவியலில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்துக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இதுகுறித்து அக்கட்சியினர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. ஊழலை ஒழிப்பதாக பேசி வரும் மோடி அரசு, இது போன்ற நிகழ்வுகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஒரு சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது போன்ற புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !