Politics
ஒரு போராட்டத்தை மழுங்கடிக்க மற்றொரு போராட்டம்! : பா.ஜ.க.வின் அட்டூழியம்!
பா.ஜ.க என்றாலே அடுக்கு மொழியில் வசனங்களை விட்டடித்து திசை திருப்பும் ஆட்டக்காரர்களின் அமைப்பு என்பது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாகவே, டெல்லியின் தற்போதைய சூழலும் அமைந்துள்ளது.
கடந்த மார்ச் 21 அன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எதிராக, அமலாக்கத்துறையை ஏவவிட்டு, கைது செய்த பா.ஜ.க.வை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (26.03.24) டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு, ஆதிக்கவாத தன்மையுடைய பா.ஜ.க, டெல்லியின் ஆளும் கட்சி நிர்வாகிகள், டெல்லியின் அமைச்சர்கள் என்ற போதிலும், அவர்களை சிறைபடுத்தி, டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் ஒரு வேளை, பா.ஜ.க.வின் பாசிச தன்மையை உணர்ந்து விடுவார்களோ? அல்லது ஆம் ஆத்மியின் பக்கம் தேசிய செய்தி ஊடகங்களின் பார்வை சென்று விடுமோ என்ற அச்சத்தில், பா.ஜ.க.வும் பேச்சிற்கு ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அப்போராட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியினர் மோடிக்கு கண்டனம் தெரிவித்ததன் காரணமாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்தனர்.
இவ்விரு போராட்டங்களுக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், ஆம் ஆத்மி போராட்டத்தின் போது அமல் படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு, பா.ஜ.க.வின் போராட்டத்திற்கு இல்லை என்பது தான்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சியில் அமைந்திருக்கிறது என்று பலர் எண்ணினாலும், அங்கும் ஒன்றிய பா.ஜ.க.வின் வலுவே அதிகமாக உள்ளதென்பதற்கு, மீண்டும் இன்றைய (26.03.24) நிகழ்வு வழி உறுதிபட்டுள்ளது.
இவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்தின் அதிகாரத்தையும், ஒற்றை அதிகாரம் என்ற நோக்கில், அழிக்க துடித்து வரும் பா.ஜ.க.விற்கு, தேசிய அளவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
எனினும், மதத்தை வைத்து அதனை சரி செய்து கொள்ளலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம், சில மாதங்களில் தவிடுபுடியாகும் என்று தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!