Politics
ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்... கூட்டணியில் இருந்து வெளியேறிய JJP ? - சிக்கலில் பாஜக !
ஹரியானா மாநிலத்தில் தற்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு, பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 இடங்களிலும், சுயேட்சை 7 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் ஹரியானா லோகிச் கட்சி தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரும் பாஜக கூட்டணியோடு இணைந்து, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தற்போது நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து அந்தந்த மாநில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஹரியானாவிலும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை சுமூமாக முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே JJP பாஜக கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக கூட்டணியில் இருக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ-வான நயன் பால் ராவத் இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நேற்று முதல்வர் கட்டாரை சந்தித்தேன். மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசுக்கு நாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளோம்.
JJP உடனான கூட்டணியை முறிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. மற்ற சுயேட்சை எம்.எல்.ஏ-க்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது." என்றார். இவரது இந்த தகவலால் ஹரியானா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. JJP கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) ஹரியானாவில் துணை முதலமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!