Politics

தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (பிப்-12) தொடங்கியது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவையால் தொகுக்கப்பட்ட உரையை முழுமையாக படிக்க வேண்டிய ஆளுநர் அதனை படிக்காமல், 4 நிமிடத்தில் உரையை முடித்துக்கொண்டு நான் கேட்டுக்கொண்டதை போல் தேசிய கீதம் பாடவில்லை என்று சொல்லி அமர்ந்தார். தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிராமணத்திற்கு எதிராகவும், அரசியல் மாண்புகளுக்கு புறம்பாகவும் ஆளுநர் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறார்.

ஆளுநர் இவ்வாறு நடந்துக்கொள்வது முதல் முறை அல்ல, கடந்த ஆண்டும் ஆளுநர் உரையின் போதும் இதே போல் தான் பொய்யான காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் உரையினை வாசிக்காமலே வெளியேறினார். ஒவ்வொரு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சபையை அவமதிப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களையே மீண்டும் மீண்டும் அவமதித்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு ஆளுநராக பதவி வகித்ததிலிருந்தே தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிரான தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சகா என்ற ரீதியிலே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவாக சென்று சேரக்கூடிய பல மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆளுநரின் பொறுப்பு மிக்க பதவியை ஆர்.என்.ரவி எப்போதும் தனது அரசியல் லாபத்திற்காகவே பயன்படுத்தி வருகிறார்.

இவர் நாகலாந்தில் ஆளுநராக இருந்த போதும் கூட, அம்மாநில அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடு கொண்டு அம் மாநில மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானர். ஆர்.என். ரவி எங்கு எந்த பொறுப்பு வகித்தாலும் அரசியல் செயல்பாட்டாளராகவே அவரது செயல்பாடுகள் இருந்து வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையில் தகவல் பரிமாற்றம் செய்வதே, ஆளுநரின் அடிப்படை பணி. எனினும், அவற்றை முழுமையாக மறந்து,ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கும் மாநில அரசுகளை எதிரியாக நினைத்து அந்த அரசிற்கு இடையூறுகளை ஏற்படுத்துவதே தலையாய பணி என செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சட்டப்படி, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், மாநில அரசின் மொழி வாழ்த்தோடு தொடங்கப்பட்டு ஆளுநர் உரையாற்றிய பின், தேசிய கீதம் ஒலிக்கப்படுவது தான் நடைமுறை. ஆனால இவை பற்றிய புரிதலின்மையா அல்லது வேண்டுமென்றே இப்படி நடந்து கொள்கிறாரா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகிறது.

எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்து பார்த்திருக்கிறோம், அவர்களின் உரைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியும் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் முதல்முறையாக ஒரு ஆளுநர் ஒருவரின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆர்.என்.ரவி தான் ஆளுநர் உரைக்கு பின்னான, தேசிய கீதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி குட்டையை குழப்பி அரசியல் ஆதாயம் தேடு இவர்களது வட நாட்டு தந்திரத்தை இங்கேயும் செயல்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் ’இது பெரியார் மண் தமிழ்நாடு’ என்பதை ஒவ்வொரு முறையும் மக்கள் புரிய வைத்து கொண்டே இருக்கிறார்கள்.

அவரை மாண்பமை அவையில் வைத்துக்கொண்டே சபாநாயகர் ‘ சாவர்க்கர் வாரிசுகளாகிய உங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்’ என்றார். அதை இந்தியாவும் முன்மொழிந்து #GetoutRavi என்பதை மக்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து தமிழ்நாட்டிலிருந்து வெளியேற சொல்கிறார்கள்.

Also Read: இன்று தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? : முழு விவரம் இங்கே!